Kaagitha odam - Marakka mudiyuma
காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்
காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை
காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவுஅம்மா எங்களை அழைத்திடு தாயே
காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்