Senthoor Murugan Kovililae - Santhi
செந்தூர் முருகன் கோவிலிலே
ஓரு சேதியை நான் கேட்டேன்.. கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்..
பாடலை நான் கேட்டேன்
கண்கள் இரண்டை வேல் என
எடுத்து கையோடு கொண்டானடி..
கண்கள் இரண்டை வேல் என
எடுத்து கையோடு கொண்டானடி..
கன்னியின் மனதில் காதல்
கவிதை சொல்லாமல் சொன்னானடி
செந்தூர் முருகன் கோவிலிலே
ஓரு சேதியை நான் கேட்டேன்.. கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்..
பாடலை நான் கேட்டேன்
ஊர்வலம் போனவன் ஓரிரு
மாதம் வராமல் நின்றானடி
ஊர்வலம் போனவன் ஓரிரு
மாதம் வராமல் நின்றானடி
வாராமல் வந்தவன் பாவை
உடலை சேராமல் சென்றானடி..
சேராமல் சென்றானடி.
செந்தூர் முருகன் கோவிலிலே
ஓரு சேதியை நான் கேட்டேன்.. கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்..
பாடலை நான் கேட்டேன்
நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாயகன் தானும் ஓலை
வடிவில் என்னோடு வந்தானடி
ஆடை திருத்தி மாலைகள்
தொடுத்து வாசலில் வருவேனடி
ஆடை திருத்தி மாலைகள்
தொடுத்து வாசலில் வருவேனடி
மன்னவன் என்னை மார்பில்
தழுவி வாழ்வென சொல்வானடி
வாழ்வென சொல்வானடி
செந்தூர் முருகன் கோவிலிலே
ஓரு சேதியை நான் கேட்டேன்.. கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்..
பாடலை நான் கேட்டேன்