Manam Ennum Medai Mele
மனம் என்னும் மேடையின் மேலே,
முகம் ஒன்று ஆடுது, குயில் ஒன்று பாடுது,
யார் வந்தது, அங்கே யார் வந்தது,
முகம் ஒன்று ஆடுது, குயில் ஒன்று பாடுது,
யார் வந்தது, அங்கே யார் வந்தது,
மனம் என்னும் மேடையின் மேலே,
முகம் ஒன்று ஆடுது, இசை ஒன்று பாடுது,
யார் வந்தது,அங்கே யார் வந்தது,
மனம் என்னும் மேடையின் மேலே,
முகம் ஒன்று ஆடுது,குயில் ஒன்று பாடுது,
யார் வந்தது, அங்கே யார் வந்தது,
தமிழ் காவிரி நீராடி,
இரு விழியில் காதல் மலர் சூடி,
வண்ணப் பூச்சரம் போலாடி,
உடலழகில் பொன்னுடன் விளையாடி,
தமிழ் காவிரி நீராடி,
இரு விழியில் காதல் மலர் சூடி,
வண்ணப் பூச்சரம் போலாடி,
உடலழகில் பொன்னுடன் விளையாடி,
சிலை ஒன்று நேரில் வந்து,
உயிர் கொண்டு பேசுது,
கலைத் தென்றல் வீசுது,
யார் வந்தது, அங்கே யார் வந்தது,
மனம் என்னும் மேடையின் மேலே,
முகம் ஒன்று ஆடுது, இசை ஒன்று பாடுது,
யார் வந்தது, அங்கே யார் வந்தது,
விழி மேலொரு விழி சேர்த்து,
பருவக்களை மேனியில் கை சேர்த்து,
கனி இதழுடன் இதழ் சேர்த்து,
வெண்ணிலவின் இரவுக்குச் சுவை சேர்த்து,
விழி மேலொரு விழி சேர்த்து,
பருவக்களை மேனியில் கை சேர்த்து,
கனி இதழுடன் இதழ் சேர்த்து,
வெண்ணிலவின் இரவுக்குச் சுவை சேர்த்து,
சிலை ஒன்று தேரில் வந்து,
எனைக் கொண்டு சென்றது,
துணைத் தென்றல் ஆனது,
யார் வந்தது.. அங்கே யார் வந்தது,
மனம் என்னும் மேடையின் மேலே,
முகம் ஒன்று ஆடுது, இசை ஒன்று பாடுது,
யார் வந்தது, அங்கே யார் வந்தது