கண்ணா...
கருமை நிறக் கண்ணா...
உன்னைக் காணாத கண் இல்லையே
கண்ணா
கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண் இல்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
கண்ணா
கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண் இல்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
கண்ணா
கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண் இல்லையே
MUSIC
மனம் பார்க்க மறுப்போர் முன்
படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன்
கொடுத்தாய் கண்ணா
மனம் பார்க்க மறுப்போர் முன்
படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன்
கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனைச் சேர்க்க
மறந்தாய் கண்ணா
இனம் பார்த்து எனைச் சேர்க்க
மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்துச்
சிலையாக அமர்ந்தாய் கண்ணா
கண்ணா...
கருமை நிறக் கண்ணா...
உன்னைக் காணாத கண் இல்லையே
MUSIC
பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா
அதில் பூப் போல நினைவொன்று
வைத்தாய் கண்ணா
பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா
அதில் பூப் போல நினைவொன்று
வைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா...
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா...
எந்தக் கடன் தீர்க்க என்னை
நீ படைத்தாய் கண்ணா
கண்ணா...
கருமை நிறக் கண்ணா...
உன்னைக் காணாத கண் இல்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
கண்ணா...
கருமை நிறக் கண்ணா...
உன்னைக் காணாத கண் இல்லையே
MUSIC