Poongathave Thal Tiravai
பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
(பூங்கதவே)
நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்
(பூங்கதவே)
திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அன்னேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்
(பூங்கதவே)