M: Koduthathellam koduthaan,
avan yaarukkaga koduthaan
orutharukka koduthaan,
illai oorukkaga koduthaan,
M: koduthathellam koduthaan,
avan yaarukkaga koduthaan
orutharukka koduthaan,
illai oorukkaga koduthaan...
M: mankudisai vasalendral,
thendral vara veruthiduma...(2)
maalai nila yezhai endral,
velicham thara maruthiduma
unakkaga ondru, enakkaga ondru
oru podhum deivam koduthathillai.
M: koduthathellam koduthaan,
avan yaarukkaga koduthaan
orutharukka koduthaan,
illai oorukkaga koduthaan....
M: padaithavan mel pazhiyum illai,
pasithavan mel pavam illai
kidaithavargal pirithukondar,
uzhaithavargal theruvil nindrar
palar vaada vaada, silar vaazha vaazha
oru podhum deivam koduthathillai...
M: koduthathellam koduthaan,
avan yaarukkaga koduthaan,
orutharukka koduthaan,
illai oorukkaga koduthaan....
M: illai enbor irukayile,
iruppavargal illai enbar(2)
madi niraya porul irukkum,
manam niraya irul irukkum
ethu vantha pothum, pothuvenru vaithu
vaazhginra perai vaazhthiduvom...
M: koduthathellam koduthaan,
avan yaarukkaga koduthaan
orutharukka koduthan,
illai oorukkaga koduthaan...(2)
------------------------------------------------------------
ஆ: கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்....
ஆ: கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்...
ஆ: கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்...
ஆ: மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை....
ஆ: கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்.....
ஆ: படைத்தவன் மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை....
ஆ: கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்...
ஆ: இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
எது வந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்....
ஆ: கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்........