F: nithtiraiyil vanthu
nenjil idam konda
uththaman yaarodi thozhi
nithtiraiyil vanthu
nenjil idam konda
uththaman yaarodi...
M: nilave ennidam nerungathey
nee ninaikkum idaththil naanillai,
nilave ennidam nerungathey
nee ninaikkum idaththil naanillai,
malare ennidam mayangathey
nee mayangum vagaiyil naanillai,
nilave ennidam nerungathey
nee ninaikkum idaththil naanillai...
M: kodaiyil oru naal mazhai varalaam
en kolaththil inimel ezhil varumo,
kodaiyil oru naal mazhai varalaam
en kolaththil inimel ezhil varumo,
paalaiyil oru naal kodi varalaam
en paarvaiyil inimel sugam varumo...
M: nilave ennidam nerungathey
nee ninaikkum idaththil naanillai...
M: oomaiyin kanavai yaar arivaar
oomaiyin kanavai yaar arivaar,
en ullathin kathavai yaar thirappar
moodiya megam kalaiyumunne
nee paada vanthaayo vennilave...
M: nilave ennidam nerungathey
nee ninaikkum idaththil naanillai...
M: amaithi illatha nerathile
amaithi illatha nerathile,
antha aandavan ennaiye padaiththu vittan
nimmathi izhanthe naan alainthen,
intha nilaiyil unnai yen thoothu vittan...
M: nilave ennidam nerungathey
nee ninaikkum idaththil naanillai,
malare ennidam mayangathey
nee mayangum vagaiyil naanillai,
nilave ennidam nerungathey
nee ninaikkum idaththil naanillai...
------------------------------------------------------------
பெ: நித்திரையில் வந்து நெஞ்சில்
இடம் கொண்ட உத்தமன் யாரோடி,
தோழி,
நித்திரையில் வந்து நெஞ்சில்
இடம் கொண்ட உத்தமன் யாரோடி....
ஆ: நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை,
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை,
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நானில்லை,
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை....
ஆ: கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ,
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ,
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ....
ஆ: நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை....
ஆ: ஊமையின் கனவை யார் அறிவார்
ஊமையின் கனவை யார் அறிவார்,
என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
மூடிய மேகம் கலையுமுன்னே
நீ பாட வந்தாயோ வெண்ணிலவே....
ஆ: நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை....
ஆ: அமைதி இல்லாத நேரத்திலே
அமைதி இல்லாத நேரத்திலே,
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்,
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்.....
ஆ: நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை,
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நானில்லை,
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை....