உன்னை சேர்ந்த செல்வம்
M. நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழவேண்டும்
F. நம் காதல் உள்ளம் கலைக்கோயில்
இரு கண்கள் கோயிலுக்கு வாசல்
நமதாசை கோயில் மணி ஓசை
அதில் அன்பு வண்ண மலர் பூஜை
அதில்அன்பு வண்ண மலர் பூஜை
நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழவேண்டும்
M. ஸ்ரீராமன் நெஞ்சில் நின்ற சீதை
மலர் கண்ணன் தேடிக் கொண்ட ரா...தை
மனம் உருகி சூடிக் கொண்ட கோதை....
ஒன்று சேர்ந்து வந்ததிந்த பாவை
F. உன் விரல்கள் என் அழகை மீட்டும்
உன் விழிகள் என் உயிரை வாட்டும்
உன் விரல்கள் என் அழகை மீ..ட்டும்
உன் விழிகள் என் உயிரை வா...ட்டும்
உன் குரலும் என் பெயரை கூட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும்
நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்...வம்
இனி என்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழவேண்டும்
M. உன் அச்சம் நாணம் என்ற நாலும்
என் அருகில் வந்தவுடன் அஞ்..சும்
இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்
B. நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெ...ய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும்
நம் இளமை வாழவேண்டும்