திரைப்படம் : கைதி கண்ணாயிரம்/1960
இசை: KV மஹாதேவன்/பாடலாசிரியர்: மருதகாசி
பாடகர் : P சுசீலா
இசை: KV மஹாதேவன்/பாடலாசிரியர்: மருதகாசி
பாடகர் : P சுசீலா
ஆ......ஆ...ஆ.....
ம்ம்ம்ம்.....
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி கொஞ்சிக்கொஞ்சி
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி கொஞ்சிக்கொஞ்சி
ஆ......ஓ.....ஆ..... ஓ....
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்
உண்மை இதை உணர்ந்து
நன்மை பெற படித்து
உலகினில் பெரும்புகழ் சேர்த்திடடா
பள்ளி சென்று கல்வி பயின்று
பலரும் போற்ற புகழ் பெறுவேன்
சபாஷ்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
ஆ......ஓ.....ஆ..... ஓ....
அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு
அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரனாவேன்
சபாஷ்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி கொஞ்சிக்கொஞ்சி
ஆ......ஓ.....ஆ..... ஓ....
தன்னந்தனிமையில் நீயிருந்தால்
துன்பப்புயலுமே உனைச் சூழ்ந்தால்
தன்னந்தனிமையில் நீயிருந்தால்
துன்பப்புயலுமே உனைச் சூழ்ந்தால்
கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா
கண்மணி எனக்கது சொல்லிடு நீ
புயலைக் கண்டு நடுங்க மாட்டேன்
முயன்று நானே வெற்றி கொள்வேன்
சபாஷ்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்