Unakkagave Naan Uyir Vaazhthene
உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே
உலவும் தாபமே எனை நகைத்தாலுமே
உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே
விண்மதி வானில் முகில் சேர்ந்தாலும்
என் மன வானில் இருள் சூழ்ந்தாலும்
உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே
விரகத்தின் கனவே சுகமாகாதா
இதயத்தின் நினைவே இனிமையாகாதா
விரகத்தின் கனவே சுகமாகாதா
இதயத்தின் நினைவே இனிமையாகாதா
பிரிவினில் காணும் இன்பத்தைப் போல
பேரின்பம் ஏதுண்டோ.ஓஒ
உயிர் ஓவியமே உனையே பிரியேன்
உனது தியானமே நானே மறவேன்உயிர் ஓவியமே உனையே பிரியேன்
இதயமே உன்னை இணைந்து சென்றாலும்
இன்பக் கனவிலே மறைந்து விட்டாலும்
இணையேதுமில்லா பிரேமையினாலே
இதுதான் புவி மேலே
உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே
கனவிலும் நீயே நினைவிலும் நீயே
மன மாளிகையில் மகிழும் தேவியே
உலகமே யாவும் ஒன்றாயினும்
என் உடலும் உயிரும் நீயே..ஏ.
உயிர் ஓவியமே உனையே பிரியேன்
உலவும் தாபமே எனை நகைத்தாலுமே
உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே